Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மறந்துவிட்டதன் விளைவுதான் இன்றைய இந்தியா..! - நல்லகண்ணு வருத்தம்

Tiruppur: 

நாட்டுக்காக உயிரிழந்த தியாகிகளின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நாம் கட்டாயமாக அறியப்படுத்தவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார். 

'சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்திய சுதந்திரத்துக்காக திருப்பூரில் போராடிய 100-க்கும் மேற்பட்ட தியாகிகளைப் பற்றிய தொகுப்பை உள்ளடக்கிய இந்நூலை கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 'ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டின் கொடியைக் காப்பாற்றப் போராடி, உயிர் நீத்த குமரன் வாழ்ந்த மண் இது. குமரனையும், அவருடன் சேர்ந்து சுதந்திரத்துக்காக போராடிய மற்ற தியாகிகளைப் பற்றியும் மக்களுக்கு அறியப்படுத்த இங்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாடு மறந்துவிட்டு வாழ்ந்தால், என்னாகும் என்பதற்கு இந்நாட்டின் தற்போதைய நிலையே சரியான உதாரணமாக இருக்கிறது. சுதந்திரக் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள். இந்தியாவில் அன்று நிலவிய பன்முகத்தன்மை இன்றைக்கு மறுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்ற மூன்று மாதத்தில் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யாரால் கொல்லப்பட்டார் என்பதை மூடி மறைப்பதற்காக இன்றைக்கு மத்திய அரசு அக். 2-ம் தேதியன்று தூய்மை இந்தியா திட்டத்தை பெரிதுபடுத்தி கொண்டாடுகிறார்கள். 

மறைந்துபோன தியாகிகளின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் நாம் கட்டாயமாக அறியப்படுத்த வேண்டும். அவர்களைப் பற்றிய ஆவணப்படங்களை உருவாக்க வேண்டும். நாட்டுக்காகப் பாடுபட்டவர்களின் வரலாறு நம் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முறையில் நாம் ஒப்படைக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close