Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரி மாணவி மர்ம மரணம்..! - மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை..!

Tiruppur: 

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரின் மரணத்தில், சந்தேகம் இருப்பதாகக்கூறி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தத் தொடங்கியதால், உடுமலை அரசு கலைக் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில், வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார் கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த புஷ்பா ஏஞ்சல். இவர் கல்லூரிக்குச் சொந்தமான அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி, தினமும் கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், நேற்றைய தினம் விடுதியின் தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார் புஷ்பா ஏஞ்சல். தண்ணீர் தொட்டி அருகே மாணவி புஷ்பாவின் ஆடை கிடந்துள்ளதை கண்ட சக மாணவிகள், பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்துகொண்டு இருந்த புஷ்பாவின் சடலத்தைப் பார்த்துவிட்டு, கல்லூரி விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், மாணவி புஷ்பாவின் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

மாணவி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்திருப்பாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று மாணவி புஷ்பா ஏஞ்சலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவியின் மரணத்துக்கு நீதி கோரியும், கல்லூரி வளாகத்தின் முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டது கல்லூரி நிர்வாகம். இதனால் கல்லூரி வளாகம் முன்பாக திரண்டிருந்த மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நாளை மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close