Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம்..! அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை!

மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளதை தலைமை ஆசிரியர் சகிதா பாராட்டி வாழ்த்தினார்.

திருநெல்வேலி பி.எஸ்.என் கல்லூரியில் மாநில அளவிலான 35-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவிகள் கவிபிரபா, மௌசிகாவாணி.இருவரும் பங்கேற்றனர். இதில் 30 பள்ளி மாணவிகள் 32 மாவட்டத்தில் இருந்து பங்கேற்றார்கள். அங்கு நடைபெற்ற டேபிள் டென்னிஸ் உள்விளையாட்டரங்குப் போட்டியில் மௌசிகாவாணி, கவிப்பிரபா ஆகியோர் பங்கேற்றனர். மாநில அளவிலான போட்டியில் மூன்றாவதாக வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்கள். மாநில அளவில் விளையாட்டில் சாதனை படைத்த மாணவிகளை தலைமை ஆசிரியை சகிதா, விளையாட்டு ஆசிரியர் கலைச்செல்வி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வியிடம் பேசும்போது, 'கிராமப்புறத்தில் இருந்து வரக்கூடிய ஏழை மாணவிகள் இவர்கள். 6-ம் வகுப்பு படிக்கும்போதே எந்த மாணவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்று பிரித்துவிடுவேன். அதன்பிறகு நானே அந்த மாணவிகளுக்கு விளையாட்டுக்கேற்ப பயிற்சி கொடுப்பேன். டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கு எங்கள் மாணவிகள் பயன்படுத்திய பேட் காஸ்ட்லியானது கிடையாது. அந்த மாதிரியான பேட் வாங்குவதற்கான வசதி இந்த மாணவிகளுக்கு கிடையாது. எங்களின் கடுமையான பயிற்சி, அரசுப் பள்ளி மாணவிகளால் சாதிக்க முடியும் என்கிற வெறிதான். இன்றைக்கு என் மாணவிகள் வெண்கலப்பதக்கம் வாங்க முடிந்திருக்கிறது' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close