Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் பலி..!

மின்னல் தாக்கி ஆடுகள் பலி

நெல்லையில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி 21 ஆடுகளும் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது. அம்பாசமுத்திரம், கடையம், முக்கூடல், திசையன்விளை, திருவேங்கடம் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த வாரத்தில் பெய்த மழையின்போது விவசாயப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள் தற்போது பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் பலத்த இடியுடனும் மின்னலுடனும் மழை பெய்தது. இதனால் விவசாயப் பணிக்காக காடுகளில் இருந்தவர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். நாங்குநேரி அருகே உள்ள அம்பூரணி சாத்தான்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தளவாய் என்ற 70 வயது முதியவர் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆடுகளை ஒரு மரத்தின் அடியில் ஒதுக்கிவிட்டு அவரும் சற்று தூரம் தள்ளி மழையில் நனைந்தபடியே நின்று கொண்டிருந்தார். 

ஆடுகள்

அப்போது மின்னல் தாக்கியதில் அவரது ஆட்டு மந்தையில் இருந்த 21 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஆடுகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட இழப்பு காரணமாக அவர் மிகுந்த சோகம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். கண் முன்பாக நடந்த இந்த சம்பவத்தால் தளவாய் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தீபாவளி நெருங்கும் சமயத்தில் ஆடுகள் பலியானதால் ஏற்பட்ட இழப்பு அவரை கூடுதல் சோகம் அடைய வைத்தது. 

இதனிடையே, திருவேங்கடம் அருகே உள்ள சந்தானம் என்பவர் தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அங்குள்ள மரத்தில் பசு மாட்டைக் கட்டி வைத்துள்ளார். திடீரென மின்னல் தாக்கியதில் அவரது பசு மாடு உயிரிழந்தது. இதேபோல், சிவந்திபட்டி கிராமத்திலும் ஒரு பசு மின்னல் தாக்கி உயிரிழந்தது. இந்தச் சம்பவங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close