Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வழிப்பறிக் கொள்ளையனை மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்!

வழிப்பறி கொள்ளையன்

நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை பொதுமக்களே மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். அவனைப் போலீஸார் மீட்டு கைதுசெய்தனர். 

நெல்லையில் வழிப்பறிச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை அரிவாளைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் சமீபத்தில் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். 

வழிப்பறி சம்பவம்

நெல்லையின் தெற்குப் புறவழிச் சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் பிஸியாக இருக்கும். அந்தச் சாலையில், மாலை நேரத்தில் வேகமாக ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் சாலையோரமாக நடந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்த பேட்டையைச் சேர்ந்த கோதர் மைதீன் என்பவரிடம் இருந்து செல்போனை பறித்தனர். அந்த ஆட்டோவில் 3 பேர் இருந்துள்ளனர். பின் சீட்டில் இருந்த நபர் செல்போனை பறித்ததும் ஆட்டோ வேகமாக சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கோதர் மைதீன்  சத்தமிட்டபடியே ஆட்டோவின் பின்னாலேயே ஓடியிருக்கிறார்.

இதனால் அந்த வழியாகச் சென்றவர்கள் ஆட்டோவை விரட்டி இருக்கிறார்கள். அதனால் பயந்துபோன அந்தக் கும்பல் ஆட்டோவை விட்டு இறங்கி வயல் வழியாக தப்பி ஓடினர். அவர்களில் ஒரு நபர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். அவரின் கைகளைக் கட்டிய பொதுமக்கள், அருகில் இருந்த மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

பிடிபட்ட ஆட்டோ

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் இர்ஷாத் என்பதும் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் கும்பல் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close