Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை..! அச்சத்தில் கிராம மக்கள்

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சிறுகுன்றா கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்து சிறுகுன்றா என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்தின் கட்டடத்தை உடைத்து, உள்ளே  மூன்று மூட்டை அரிசியை காட்டு யானை தி்ன்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே, வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், காட்டு யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர்.

சிறுகுன்றா பகுதியில் நுழைந்த யானை, அங்கு ராஜேஸ்வரி என்பவரது வீட்டை இடித்து நாசம்செய்தது. இதையடுத்து, நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டது. மீண்டும் அந்தப் பகுதிக்குள் காட்டு யானைகள் வந்துவிடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close