Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கீழடி அகழ்வாராய்ச்சிக்காக திருப்புவனத்தில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

கீழடி அகழ்வாராய்ச்சியை மூடுவதைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Keeladi meeting

 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி மூடப்பட்டதைக் கண்டித்து, திருப்புவனத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

’கீழடியில், 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 5000-க்கும் மேற்பட்ட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த வராலாற்றை, நாகரிகத்தை இழுத்துமூடும் ஏற்பாடாக, ஆராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படுகின்றன. தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மைய அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டனர். அகழ்வுப் பணி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் தலமையில், சி.பி.ஐ ஒன்றியச் செயலாளர் சுந்தரமகாலிங்கம் முன்னிலையில் நடந்தது. போராட்டத்தை விளக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், த.மா.க வட்டாரத் தலைவர் ராஜா, தே.மு.தி.க சார்பில் சேகர், விடுதலை சிறுத்தைகள் சார்பில்  கண்ணன், மாங்குடிமணி, தி.மு.க ஒன்றியச் செயலாளர் கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, நகரச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பலர் பேசினார்கள். 

கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, "கீழடி, தமிழர்களின் வரலாற்றுப் பட்டயம். இதை வைத்து, தமிழன்தன் மூத்த குடிமகன்  என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்று பா.ஜ.க பயப்படுகிறது. நான்காம் கட்ட ஆய்வுப் பணி, வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், தமிழக அரசு உடனடியாக ஆய்வைத் தொடங்க வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்து கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், ஆய்வுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு நிரந்தரமாக நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close