Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனைக்கு 2-வது நாள் விசிட்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என விஜயகாந்த் அறிவிப்பு

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்ற தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார். டாக்டர்களிடமும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்துக் கேட்டறிந்தார். 

தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் முயற்சியில் தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசு மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்து கேட்டறிந்துவருகின்றனர். தே.மு.தி.க சார்பில், அதன் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் சென்று, டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் வேண்டிய உதவிகளைச் செய்துவருகின்றனர்.

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் பிரேமலதா கோவை மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் சென்று, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்தும் கேட்டறிந்தார்.

இரண்டாவது நாளாக இன்றும் விஜயகாந்த் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜயகாந்த், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அப்போது, உடனிருந்த டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் நோயின் தன்மைகுறித்துக் கேட்டறிந்தார். விஜயகாந்த் வருகையையொட்டி, தே.மு.தி.க-வினர் நூற்றுக்கணக்கானோர், மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அப்போது, கார்ரின் மேல் ஏறிய விஜயகாந்த், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் பற்றி பிரதமர் மோடியிடம் கூறி என்ன நடக்கப்போகிறது என்றும் கூறினார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தே.மு.தி.க போட்டியிடுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த விஜயகாந்த், தே.மு.தி.க போட்டியிடாது என்றும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றும் கூறினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close