Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`டெங்கு காய்ச்சல்குறித்து உண்மை நிலையை மத்தியக்குழு வெளியிட வேண்டும்!' - மு.க.ஸ்டாலின்

'டெங்கு காய்ச்சல் தொடர்பாக, மத்தியக் குழு உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில், மத்தியக்குழு டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக தமிழகம் வருகை தந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எந்தக் காரணத்துக்காக நிறுத்தப்பட்டதோ, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்தியக்குழு உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. நாளைக்கே ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயார்நிலையில் உள்ளது'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close