Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒரு வேளைக் கஞ்சியும் போச்சு' - கொந்தளிக்கும் விவசாயத் தொழிலாளர்

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைகேட்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் குறித்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கடலூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "கடலூர் ஒன்றியம் முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு ஒரு வேளை கஞ்சிக்காவது உத்தரவாதம் கிடைத்தது. அதிலும் மண்ணை அள்ளிப்போடுவது சரியல்ல. தீபாவளிப் பண்டிகையை எதிர்நோக்கியுள்ள நேரத்தில்கூட வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.


   போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

இதுகுறித்து கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இன்றுவரையில் வேலையும் வழங்கவில்லை, மனுக்கள் பெற்றுக்கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டும் வழங்கவில்லை. மனு கொடுத்த 15 நாள்களுக்குள் வேலை அளிக்கப்படாவிடில், தொழிலாளர் சட்டத்தின்படி வேலையில்லா நாள்களுக்கு சம்பளத்தில் பாதி கொடுக்க வேண்டும். ஆனால், இந்த அதிகாரிகள் ஒப்புகைச் சீட்டும் வழங்காமல், வேலையும் வழங்காமல் இத்திட்டத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். உடனடியாக எங்களுக்கு வேலை அல்லது ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். அதுவரை இவ்வலுவலகத்தில் காத்திருப்போம். இல்லையென்றால், தொழிலாளர் ஆணையத்தை அணுகுவோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close