Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேளிக்கை வரி 8 சதவிதமாகக் குறைப்பு! என்ன சொல்கிறார் விஷால்

Chennai: 

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், திரைத்துறைப் பிரதிநிதிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பையடுத்து, திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. 

முதல்வரை சந்தித்த திரைத்துறையினர்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு, திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மல்டிபிளக்ஸ்களில் குறைந்தபட்சம் 50 ரூபாய், அதிகபட்சம் 150 ரூபாயும், ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்சம் 40 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாயும், ஏசி அல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 30 ரூபாய், அதிகபட்சம் 80 ரூபாயும் விதிக்கப்படும். இந்த டிக்கெட் விலையுடன் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரியும் விதிக்கப்படும். இதற்கு மேல் ஒரு ரூபாய்கூட சினிமா தியேட்டர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. அப்படி எங்காவது வசூலிக்கப்பட்டால், மக்கள் புகார் அளிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close