Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளம், தீ விபத்தின்போது எப்படிச் செயல்படுவது? - ஒத்திகைப் பயிற்சி அளித்த வீரர்கள்

பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

பேரிடர் தணிக்கும் நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் சார்பில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடுவது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி பேரிடர் தணிக்கும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1989-ம் ஆண்டு முதல் இந்நாளில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் தற்காப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்சிகள் மற்றும் ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நாளையொட்டி இன்று ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து பேரிடர் கால விழிப்பு உணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணியின் முடிவில் சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பில் நடத்தப்பட்டது. மழை, வெள்ளம் போன்ற காலங்களில் எளிமையான பொருள்களை கொண்டு மிதவைகள் தயாரித்தல், தீ விபத்தின்போது எத்தகைய சாதனங்களைக் கொண்டு தீயை அணைப்பது போன்ற செய்முறை நிகழ்வுகளுடன், சேதுபதி சீதக்காதி நீச்சல் குளத்திலும் ஒத்திகைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் முரளி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டாட்சியர் சண்முகசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் நாகராஜன், இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close