Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குப்பைகள் அகற்றம்.. வாய்க்கால் தூர்வாரல்... மருத்துவ முகாம்! கரூர் ஆட்சியர் அதிரடி

விகடன் இணையத்தள செய்தி எதிரொலியாக கரூர் மாவட்ட நிர்வாகம் குப்பைகளையும் சாக்கடை கழிவுகளையும் அகற்றியதோடு, மருத்துவ முகாம்களை நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கையை கரூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்த கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் தொடங்கி அருகில் உள்ள பிள்ளாப்பாளையம் வரை இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடந்ததையும், சாலையின் இருபுறமும் உள்ள வாய்க்கால்கள் அருகில் உள்ள ஓடை ஆகியவற்றில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நின்று டெங்கு கொசுக்களை கணக்கற்று உற்பத்தி செய்வதை பற்றி எழுதி இருந்தோம். இந்த பிரச்னையை பற்றி, 'ஒருபக்கம் சாக்கடை; மறுபக்கம் பெருகும் டெங்கு கொசுக்கள்... அச்சத்தில் கரூர் மக்கள்' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். அந்த செய்தியில், 'குப்பைகளை அள்ளாமலும், சாலை ஓரம் உள்ள வாய்க்கால்களை தூர் வாராததாலும் டெங்கு கொசுக்கள் பெருகி, இந்தப் பகுதி மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. அதோடு, மருத்துவத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ இந்த பகுதியில் எந்தவித டெங்கு காய்ச்சல் முன்நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேம்பு கஷாயம்கூட கொடுக்கவில்லை' என்ற அந்தப் பகுதி மக்களின் டெங்கு அச்சத்தை குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த தகவல் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கவனத்திற்கு போக, செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். காலையிலேயே ஒரு டிப்பர் லாரியும், பொக்லைனும் வந்து சம்பந்தப்பபட்ட பகுதியில் நின்றது. லாலாப்பேட்டை ரயில்வே கேட் தொடங்கி பிள்ளாப்பாளையம் வரை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்ற தொடங்கினர் துப்புரவு தொழிலாளர்கள். அதன்பிறகு, இருபுறமும் உள்ள வாய்க்கால்கள் மற்றும் அருகில் ஓடும் ஓடையில் தேங்கி நின்ற மழைநீர் வடிய  வாய்க்கால்களையும், ஓடையையும் பொக்லைன் மூலம் தூர்வாரினர். அதன்காரணமாக, டெங்கு கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக இருந்த தேங்கி நின்ற மழைநீர் வடிய தொடங்கியது.  இன்னொருபக்கம், இரண்டு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு வந்து பிள்ளாப்பாளையத்தில் இறங்கியது. டெங்கு தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் சொல்ல, 'இப்படி ஒரு முகாம் நடக்கப் போவதாக யாரும் சொல்லலையே' என்று குழம்பினர் மக்கள். இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு பகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு கொடுத்தனர்.

விகடன் இனையத்தள செய்தியால்தான் இந்த மாற்றம் என்பதை தெரிந்துகொண்ட அந்த பகுதி சமூக ஆர்வலரான நாகராஜன், "இந்தப் பகுதி குறைகளை உடனடியாக போக்கி, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த விகடனுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். இன்னும் பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் டெங்கு கொசுக்கள் உற்பத்தி இடங்களாக இருக்கின்றன. அவற்றையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close