Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு வழக்கறிஞரின் உயிரைப் பறித்த டெங்கு!

 டெங்கு

டெங்கு காய்ச்சலால் பெண் அரசு வழக்கறிஞர் உயிரிழந்தார். இதனால் வழக்கறிஞர்கள் இன்று தஞ்சைப் பழைய பேருந்துநிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 வழக்கறிஞரின்தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவர் அ.தி.மு.க-வின் தஞ்சை மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வந்தார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அரசு வழக்கறிஞராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதாவுக்கு, கடந்த 4 நாள்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிசிச்சை பலனின்றி இன்று காலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கவிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்.டி.ஓ வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கலெக்டர் வந்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றனர். டெங்கு நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நகர்ப் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் கொசு மருந்து அடித்திருக்கிறீர்களா, நிலவேம்பு கஷாயம் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்திருக்கிறீர்களா, அரசாங்கம் எதுக்கு இருக்கிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று உறுதியளித்த பின்னரே வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close