Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி போன்ற பகுதிகளிலுக்கு   தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. கதர் மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் லதா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மானாமதுரை தாலுகாவில் 5 அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 834 மாணவ மாணவிகளுக்கும், திருப்புவனம் தாலூகாவில் உள்ள ஏழு அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,119 மாணவ மாணவிகளுக்கும், இளையான்குடி தாலுகாவில் ஐந்து அரசுப் பள்ளியில் பயிலும் 584 மாணவ மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான மாரியப்ப கென்னடி தற்போது சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

இத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அவருடைய பெயர் போடாமலும் அழைக்கப்படாமலும் இப்படியொரு அரசு விழா நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து மாரியப்ப கென்னடியிடம் பேசினோம். ``நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதேநேரத்தில் என்னை அழைக்காதது பற்றி நான் கவலைப்படவில்லை. ஐந்து போலீஸ் வாகனத்தில் டி.எஸ்.பி தலைமையில் அமைச்சர், எம்.பி., என் தொகுதிக்குள் வந்திருக்கிறார்கள். இது அவ்வளவு பெரிய நிகழ்ச்சியும் கிடையாது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அம்மா அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள்தான் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தது செல்லாது. நீதிமன்றத்துக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். இவர்களின் அடாவடி நடவடிக்கைக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close