Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை தமன்னாவால் 5 ஆம்புலன்ஸ் தவிப்பு!

சேலம், நான்குரோடு பகுதியில் ஒரு தனியார் நிறுவன மொபைல் ஷோரூம் கிளைத் திறப்பு விழாவுக்காக நடிகை தமன்னா வந்திருந்தார். அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் 3 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் தவித்தன.

தமன்னா

சேலம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் இடையில் நான்குரோடு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் புதிய மொபைல் ஷோரூமை காலை 10 மணிக்கு நடிகை தமன்னா திறந்து வைப்பதாக அறிவித்திருந்தது. அதையடுத்து இன்று காலை 9:30 மணிக்கு ரசிகர்கள் பட்டாளம் குவியத் தொடங்கினார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலுக்கு இடையில் 11 மணிக்குப் பாதுகாப்போடு நடிகை தமன்னா காரை விட்டு இறங்கு வந்து ரிப்பன் வெட்டி கடையைத் திறந்துவைத்தார்.  பிறகு கடைக்குள் சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். வெளியே ரசிகள் கூட்டம் ஆர்ப்பரித்தது. கடையைவிட்டு வெளியே வந்த தமன்னாவும், டி.வி தொகுப்பாளினி ஜாக்குலினும் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்கள். ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்தார்கள். அவர்களைப் பார்த்து தமன்னா, ''நான் ரசிகர்களுக்காக வாழ்கிறேன். சென்னையைவிட அதிக அன்பும் பாசமும் சேலம் ரசிகர்கள் என்மீது வைத்திருக்கிறீர்கள். நான் சேலத்துக்கு வந்து செல்லுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன்'' என்று கூறிவிட்டு ரசிகர்களின் செல்போன்களில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

கூட்டத்தால் சிக்கிய பேருந்துகள்


பிறகு 11:45-க்கு புறப்பட்டார். தமன்னா கார் வெளியே செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். தமன்னாவுக்கு வந்த பாதுகாவலர்களும் போலீஸாரும் ரசிகர்களிடம் போராடி பல தள்ளுமுள்ளுக்கிடையே தமன்னாவை வழியனுப்பி வைத்தார்கள்.
ஏற்கெனவே நான்கு ரோடு பகுதியில் பறக்கும் பாலங்கள் பணி நடைப்பெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில் தமன்னாவின் வருகையால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனைக்குச் சென்ற 5 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் தவித்தன. பயணிகளும் முகம்சுளிக்கும் அளவுக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close