Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொண்டரின் ஆட்டோவில் பயணித்த வைகோ

திருநெல்வேலி: நெல்லையில் நடந்த ம.தி.மு.க. நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, கூட்டத்தை முடித்தபின், ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்காக ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார்.

நெல்லை புறநகர், நெல்லை மாநகர் மற்றும் குமரி மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் ஹோட்டல் சகுந்தலாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிர்வாகிகளிடம் நிதி வசூலிப்பதற்கு ரசீதுப்புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். நெல்லை புறநகர், நெல்லை மாநகர் மற்றும் குமரி மாவட்ட கழகத்தின் தேர்தல் பங்களிப்பாக ரூ.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ப.அ.சரவணன், நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் எஸ். பெருமாள், குமரி மாவட்டச் செயலாளர் எஸ். தில்லைசெல்வம், மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

##~~##
பின்னர் கூட்டம் முடிந்து திருச்சி புறப்படும் நேரத்தில் மீனவர் அணி துணை அமைப்பாளர் அகஸ்டின் பெர்ணாண்டோ தங்கள் ஆட்டோவில் வைகோ பயணிக்கவேண்டும் என்று அன்புக்கோரிக்கை வைத்தார். அதை  ஏற்ற வைகோ தனது தொண்டரின் ஆட்டோவில் பயணித்தார். அந்த ஆட்டோவில் முழுவதும் வைகோவின் புகைப்படங்களே அதிகமாக இருப்பதை கவனித்த வைகோ தொண்டரை இப்படி புகைப்படமாக வைத்து இருந்தால் மாற்றுக்கட்சி நண்பர்கள், ஆட்டோவில் பயணிக்க சங்கடப்படுவார்கள் இது வேண்டாமே என்று கடிந்து கொண்டார்.

அப்போது அகஸ்டின் வைகோவிடம், ''ஆட்டோ முழுவதும் தங்களை புகைப்படமாக இருப்பதை பார்க்கும் பொதுமக்களிடம் ம.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் அதிக நம்பகத்தன்மையை பெறுவதாகவும், தன்னிடம் மாற்றுக் கட்சி நண்பர்கள் அரசியல் சூழ்நிலை தற்போது தூய்மையற்ற நிலையில் மாறிவிட்டது, இந்தநிலையில் வைகோ போன்றவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மற்ற அரசியல் கட்சித்தலைவர்களும் நேர்மை சார்ந்த அரசியலுக்கு திரும்பவேண்டும், வைகோ போன்ற தலைவர்கள் பெரிய இடத்திற்கு வளரவேண்டியது தமிழ்நாட்டு அரசியல் நிலை திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்'' என்று பாராட்டுவதாகவும் கூறினார்.

அகஸ்டினின் பதிலைக் கேட்ட வைகோ மனநிறைவுடன் அவரை பாராட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close