Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராசா... அம்பு எய்தவரின் பதவியும் பறிக்கப்படும்: ஜெ.

சென்னை, நவ.22,2010

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அம்புதான் என்றும், விரைவில் அம்பு எய்தவரின் பதவியும் பறிக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

"என்னுடைய அறிக்கையால் தான் ராசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு இடத்தில் பதில் அளித்துள்ளார் கருணாநிதி.

மற்றொரு இடத்தில் "ஜெயலலிதா முதலில் சொன்னதெல்லாம் ராசா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான்'' என்று தெரிவித்து, என்னுடைய விருப்பம் நிறைவேறாத அளவிற்கு தி.மு.க. தானாகவே முன் வந்து மத்திய அமைச்சர் ராசாவை பதவி விலகச் செய்தது என்று கூறியிருக்கிறார். எல்லாமே ஒன்று தான்.

என்னுடைய அறிக்கையால்தான் ராசா ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை, ராசா ராஜினாமா செய்யவில்லை என்றால், பதவிலியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.

அடுத்த படியாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்றோ, ராசாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ முதலில் நான் கோரவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

முதலிலேயே அனைத்தையும் கோர வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? ஒன்றன் பின் ஒன்றாகத் தான் கோரப்படும் என்பதையும், இன்னும் கோருவதற்கு நிறைய இருக்கின்றன என்பதையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

"நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை வேண்டாமென்று சொல்லவே இல்லை'' என்று அவர் தன்னுடைய கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தவறு செய்யவில்லை என்றால், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் அளிக்க முடியுமா? உண்மையிலேயே இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், "நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்குத் தயார்'' என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்து, நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஆ. ராசாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. எனினும், அவர் வெறும் அம்புதான். அந்த அம்பை எய்தவரின் பதவி பறிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதிக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நான் பதில் அளிக்கவில்லை என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

இது குறித்து கேட்க கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்கெனவே தெரிவித்து விட்டதை கருணாநிதி படிக்கவில்லை போலும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ