Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரானைட், மணல் கொள்ளையடிப்பதை சொல்லாத திமுக அதிமுக:நல்லக்கண்ணு சாடல்!

திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள கிரானைட்,மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளையை   திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மறைத்து வருகின்றன என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

"தமிழகத்தை 50 ஆண்டுகளாக திமுக அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தான் ஆண்டு வருகிறது, இரு கட்சிகளும் ஒரே நிலையில் உள்ள கொள்கையைத் தான் கொண்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை, அவர்கள் சொன்னதும் செய்ததும் நேர்மாறாக இருந்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் உணர்ந்துள்ளனர்.

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளையில் ஆட்சிக்கு வரும் போது எல்லாம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். தற்போது பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீ வைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள குழு அமைக்க உத்தரவிட்டது அதனை தமிழக அரசு மறுத்துவிட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டு கேரளாவிலும், தமிழக ஆறுகளில் விதிகளை மீறி 10 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது.

தமிழக ஆறுகளை பாதுகாக்க இரு திராவிட கட்சிகளும் தவறி விட்டன. பெப்சி ஆலைக்கு அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளன. இதற்கென தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சீவலப்பேரியில் தடுப்பணை  கட்டி தேக்கப்படுகிறது. இயற்கை வளங்களை சுரண்டி விற்பனை செய்வதில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை அதிமுக, திமுகவிற்கு மாற்றாக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ