Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மாற்றம்:தேர்தல் ஆணையம் அதிரடி!

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய போலீஸ் கமிஷனராக அசுதோஷ் சுக்லாவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜே.கே. திரிபாதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டிஜிபியாக சி.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காவல் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலர் அபூர்வ வர்மா ஆணையிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 











 


 
 








 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ