Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோவை கொல்ல திமுகவினர் முயற்சியாம்: சாடுகிறார் முத்தரசன்!

திருச்சி: மதிமுக பொதுச் செயலாளரும் தேமுதிக-தமாகா- மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவை கொலை செய்ய திமுகவினர் முயற்சித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், தி‌ருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த வைகோ மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.இதேநிலை நீடித்தால் திமுக கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‌தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேமுதிக,தமாகா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் என்று  6 கட்சிகளைக் கொண்ட வலுவான கூட்டணியை வைகோ ஒருங்கிணைத்துள்ளதால்,  திமுக எரிச்சல் அடைந்துள்ளது.அதனால்  அவருக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்பட்டுவருவதாகவும் முத்தரசன் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close