Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தை அதிமுக, திமுக இரண்டும் சுரண்டுகின்றன! அமித்ஷா தாக்கு

பட்டுக்கோட்டை: தமிழகத்தை அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து சுரண்டுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இரண்டாம் கட்டமாக இன்று பட்டுக்கோட்டையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில்,ஊழலின் ஊற்றுக்கண்களாக திமுகவும், அதிமுகவும் இருந்து வருகின்றன. தமிழகத்தின் அனைத்து வளங்களையும் இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு சுரண்டி விட்டன. அதிமுக ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. பல்கொள்முதலில் கூட ஊழல் செய்து திளைத்துள்ளது. மேலும் அதிமுக தலைமை ஊழலில் சிறை சென்று வந்துள்ளது.

திமுக 2ஜி, ஏர்செல் போன்ற ஊழல்களில் திளைத்தது. ஆக இரு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசம் இல்லை. ஆனால், மோடியின் 2 ஆண்டு ஆட்சியில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் அதிமுக அரசு அம்மா திட்டமாக அறிவித்து விளம்பரம் தேடி வருகிறது" என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close