Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடிகளை விநியோகித்த வழக்கில் அ.தி.மு.க. அன்புநாதனுக்கு முன்ஜாமீன்

 

கோடிக்கணக்கில் பணம் மற்றும் அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூர் அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன். அதிமுக பிரமுகரான இவரது குடோனில் தேர்தல் தொடர்பான பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பார்வையாளர் ஷில்ஆசிஸ், எஸ்.பி. வந்திதா பாண்டே, வருமான வரித் துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையில் வருமான வரித் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.10,33,820 ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டை கண்டறியும் இயந்திரம், 4 கார்கள், 1 டிராக்டர், 1 ஆம்புலன்ஸ், வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையிலான வருமான வரித்துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அன்புநாதனின் வீட்டில் ரூ.4.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அன்புநாதன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தாெடர்ந்து அன்புநாதன் தலைமறைவானார். இந்தநிலையில், முன்ஜாமீன் கேட்டு அன்புநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தான் முறையாக வருமான வரி கட்டுவதாகவும், கைப்பற்றப்பட்ட பணம் தான் சம்பாதித்தது என்றும், காவல் துறையினர் தவறுதலாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.என். பிரகாஷ், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் அன்புநாதனுக்கு வழங்கி உத்தரவிட்டார்..

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ