Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை: டாஸ்மாக்குகளுக்கு தேர்தல் சிறப்பு விடுமுறை..! 'குடி’மகன்கள் கவனத்துக்கு

 

தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மே 14, 15, 16 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 19 அன்று சென்னை மாவட்டத்திலுள்ள  மதுபானக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி், தமிழ்நாடு மதுபானம் சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12(2)ன்படி வருகிற மே 16ம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வரும் 14ம் தேதி காலை 10 மணி முதல் 16ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும்,

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி அன்று முழுவதும், சென்னை மாவட்டத்திலுள்ள FL1 உரிமம் கொண்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 முதல் FL111 வரை (FL6 நீங்கலாக) அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் ஓட்டல்களின் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான சட்டவிதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதால் குடிமன்னர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ