Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவைக் காப்பாற்ற மோடி முயற்சி! - குபீர் புகார்

கோவை: அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெயலலிதாவை காப்பாற்ற மோடி முயற்சி செய்வதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பத்மநாபனுக்கு ஆதரவாக, காந்திபுரம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரூர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோனில் 500 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஆனால், வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், 11 பணம் எண்ணும் எந்திரங்கள், ஒரு கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் எந்திரம், மத்திய அரசு முத்திரையுடன் கூடிய ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் உண்மையை மூடி மறைப்பது ஏன்? பிரதமர் மோடி அரசுக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. ஜெயலலிதாவை காப்பாற்ற மோடி முயற்சி செய்கிறார் என்றும் எண்ணத்தோன்றுகிறது'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close