Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பா ஒதுங்கினார் மகன் இறங்கினார்... மகிழ்ச்சியில் படபடக்கும் மதிமுக!

கோவில்பட்டி; மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்தல் பிரசாரம் செய்துவருவது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி தமிழகம் முழுவதும் களம் காண்கிறது. இதில் வைகோ கோவில்பட்டி போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் எதிர்பாராத சம்பவமாக தான் போட்டியிடுவதில்லை என அவர் திடீரென அறிவித்தார். அவருக்கு பதிலாக அங்கு விநாயகா ரமேஷ் என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தது மதிமுக தலைமை.

இந்நிலையில் வைகோவின் மகன் துரை வையாபுரி கோவில்பட்டி தொகுதியில் வேட்பாளர் விநாயகா ரமேஷ்க்காக வாக்குகள் சேகரித்தார். இது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வாக்குகள் சேகரித்த துரை வையாபுரி, பல்வேறு கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரமும் செய்தார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர மோட்டார் வாகன பிரச்சாரம் செய்து வாக்களர்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கினார்.

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக வைகோ அறிவித்தது மதிமுக தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அரசியலில் அதிக ஆர்வம் காட்டாத வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டதும் உற்சாகம் காட்டியதும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. துரைவையாபுரி ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ