Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதியியல் பாடத்துக்கு கருணை மார்க் கூடாதாம்..! பிளஸ் 2 சிக்கல்

 

வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அதுவரை பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை புது நேருநகரைச் சேர்ந்தவர் சாமுவேல் ஆசீர்ராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மகன் ரிச்சர்ட் சாமுவேல், பிளஸ்2 தேர்வு எழுதி உள்ளான். கடந்த மார்ச் மாதம் வேதியியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியான 18வது கேள்வி, 10 மதிப்பெண் கேள்வியான 70வது கேள்வியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ கேள்வியில் (‘ஏ’ மற்றும் ‘பி’ கேள்விக்கு தலா 5 மதிப்பெண்) ‘பி’ கேள்வி ஆகியவற்றுக்கு மாணவர்கள் எந்த விடை எழுதி இருந்தாலும் 6 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள 2 கேள்விகளுமே சரியான கேள்விகள் தான்.

‘தமிழகத்தில் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இந்திய அளவில் நடக்கும் போட்டித்தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறமை இல்லை. மனப்பாடம் செய்து மட்டுமே அதிக மதிப்பெண் பெறும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் மிக ஆழமாக புரிந்து கொண்டு வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்’ என்று கடந்த கல்வி ஆண்டின் போது அரசு தேர்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த சுற்றறிக்கை அடிப்படையிலேயே பிளஸ்2 தேர்வுக்கான வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள கேள்விகளை பொறுத்தமட்டில் பாடத்தை மிக ஆழமாக புரிந்து கொண்டு படித்த மாணவர்கள் மிகச்சரியான பதிலை அளித்திருப்பார்கள். என் மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக பேராசிரியரான நானும், விவசாய பட்டதாரியான என் மனைவியும் பிளஸ்2 பாடத்திட்டத்தை என் மகன் முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லிக்கொடுத்தோம்.

இதனால், என் மகன் அந்த கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளான். என் மகனை போன்று பாடத்தை முழுமையாக புரிந்து கொண்டு படித்த மாணவர்கள் பலர் அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த பதில் அளித்திருந்தாலும் கருணை மதிப்பெண்ணாக 6 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது நன்றாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த 2 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்த மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.என். பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ