Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலவச கைப்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

ரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்துக்காக தனித் தனியாக தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

அதன் முழு விவரங்கள் வருமாறு

1. விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன்

* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

* 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

* உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு  முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 20,787 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்  9,164 கோடி ரூபாய் தான்.

* விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும்  திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* தரமான விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* பண்ணை மகளிர் குழுக்கள் விரிவாக்கப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படும்.

* வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பயறு உற்பத்தியில் தன்னிறைவு எய்தப்படும்.

* பண்ணை எந்திரங்கள் வாங்க மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

* நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு  100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* மானாவாரி விவசாயிகளின் வருமானம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

* மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்.

* தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும்.

* நீடித்த, நிலையான, கரும்பு உற்பத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

தரமான இடுபொருட்கள் கிடைக்க வழி செய்யும் வகையில் சிறப்பு நோக்க அமைப்பு (Special Purpose Vehicle) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுழல் நிதி அதிகரிக்கப்பட்டு இதன் சேவை விரிவாக்கப்படும்.

* தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

அச்சு மற்றும் ஆரம் மாதிரி (hub and spoke model) தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் மூலம் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவாக்கப்படும்.

* வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.

* சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு  80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 10 HP வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.

* விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 3,492 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம்   8,120 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள 92 குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும்.

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் பெறுவர்.

* பருத்தி உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும்.

* தென்னை விவசாயிகளின் வருவாய் பெருக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

517 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; 50 தென்னை உற்பத்தியாளர் இணையம் பதிவு செய்யப்பட்டுள்ளன; மேலும் 13 தென்னை  உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் நல்ல விலை பெற வழிவகை செய்யப்படும்.

* தரமான தென்னை கன்றுகள் விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தென்னை உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும்.  தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்திக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

* வயதான மற்றும் பூச்சி நோய் தாக்குதலுக்கு இலக்கான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யும் வகையில் ஒரு புதிய சிறப்பு திட்டம் 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* இயற்கை விவசாயம்  ஊக்கப்படுத்தப்படும்.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

* விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.

* விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.

* மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை (e-Tender) இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும்.  விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த ‘குறுஞ்செய்தி’ சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், நுகர்வோரின் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள உரிய முன் பின் இணைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.  இதற்காக எளிதில் வீணாகும் தன்மை கொண்ட காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். எ    கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.

* சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எ    கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.    

2. நதிநீர் மற்றும் நீர் ஆதாரம்

* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசின் அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டது.  காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னமும் எடுக்கவில்லை.  இவை அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட எத்தனிக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும். எ    தமிழகத்திற்கு கிடைத்திடும் நீரை குறைக்கும் வகையில் கேரள அரசால் அணைகள் கட்டப்படுவது தடுக்கப்படும்.

* அதே போன்று தமிழகத்திற்கு கிடைக்கப் பெறும் நீரை குறைக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் மூலமும், உச்ச நீதிமன்றத்தின் மூலமும் தடுக்கப்படும்.

* தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* பம்பா-அச்சன்கோயில்-வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், வாய்க்கால் புனரமைப்புத் திட்டங்கள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள் மற்றும் படுகை அணைகள் கட்டும்  திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 5,695 ஏரிகளில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், நீரியல் கட்டுமானங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் 2,870 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன. 198 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.  47 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இது போன்ற பணிகள் செயல்படுத்தப்படும்.

காவேரி டெல்டா பகுதிகளில் வெள்ள நீரை தேக்கி வைக்கவும், உப்பு  நீர் உட்புகுதலை தடுக்கவும், மதகுகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கவும், 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆசிய வளர்ச்சி வங்கி  நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் கீழ் அணைக்குக்  கீழ்ப்புறம்  ஒரு கதவணை அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  இது நிறைவேற்றப்படும்.

திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணை நீர்ப்பரப்புப் பகுதியில்  தூர் வாரும் பணிகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை  மாற்றம் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், ராம நதி அணையின் உபரி நீரை ஜம்பு நதி பாசனப் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை நிறைவேற்றப்படும்.

திருநெல்வேலி நகரில் திருநெல்வேலி வாய்க்கால் படுகையை லைனிங் செய்தல், மதகுகள் சீரமைத்தல், தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை முடிக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம், செவலப்புரை அணைக்கட்டு மற்றும் அதன் வழங்கு வாய்க்கால் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை முடிக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றின் குறுக்கே நீர்த் தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி மற்றும் விரிவான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த் தேக்கம் கட்டி முடிக்கப்படும்.

வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் புனரமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வடபாதி கிராமத்தின் அருகே அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீர் வள, நில வளத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டப் பணிகள் 2,950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உலக வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது.  இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

3. கால்நடை மற்றும் மீன்வளம், மீனவர் நலன்

* புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

* புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.

* பெரிய பால்பண்ணைகள்,  பால் குளிர்விப்பான்கள் ஆகியவை அமைக்கப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 4 ஆடுகள் விலையின்றி வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* தீவன அபிவிருத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* கறிக்கோழி பண்ணைகள் மற்றும் நாட்டுக் கோழி பண்ணைகள் ஏற்படுத்த மானியம் வழங்கப்படும்.

* மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். மீன் இறங்கு தளங்கள்  அமைக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 14 இடங்களில்  மீன்பிடி இறங்கு தளங்களும், 3 மீன்பிடி துறைமுகங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* உள் நாட்டு மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள் மேம்படுத்தப்படும்.


* மீனவர்  நிவாரண உதவித் தொகை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள்   5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* மீனவர் பாதுகாப்பு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

75 சதவீத மானியத்தில் 25 வாட் ஏழகு ரேடியோ கருவிகள் விசைப் படகு மீனவர்களுக்கும்  மற்றும் 100 சதவீத மானியத்தில் 5 வாட் ரேடியோ கருவிகள் பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. கருவிகளுக்கான உரிமம் பெற்றிட மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.  கருவிகள் வாங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.  இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

* எந்திர மீன்பிடிப் படகுகள் வாங்க தேவையான மானியம் வழங்கப்படும்.

படகுகளில் எந்திரம் பொருத்துவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.  மேலும், 580 மீனவர்கள் பயன் பெறும் வகையில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு 171 படகுகளுக்கு 50 சதவீத மானியம்  (30 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* மீன் பதனப் பூங்காக்கள் அமைக்கும்  நடவடிக்கைகள் தொடர்ந்து  எடுக்கப்படும்.

* கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு  தீர்வு காணப்படும்.

* கடல் அரிப்பு உள்ள இடங்களில் தூண்டில் வளைவு அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.    

4. உழவர் பாதுகாப்புத் திட்டம்

* வாழ்நாள் முழுவதும் பயனளிக்கக் கூடிய உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.    

5. பேரிடர் இன்னல் குறைப்பு திட்டம்

* கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்பு திட்டம்  முழுமையாக நிறைவேற்றப்படும்.

பேரிடரிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வீடுகள் கட்டுதல், பாதுகாப்பு மையங்கள் அமைத்தல், பாதுகாப்பு மையங்களுக்கான வழித்தடங்கள் அமைத்தல்,  முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் நிறுவுதல், மீன் வளத் துறையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தந்தியில்லா தொலை தொடர்பு வசதி ஏற்படுத்துதல், நாகப்பட்டினம் கடலூர் மற்றும் வேளாங்கண்ணி நகரங்களில் மின் வழித் தடங்களை பூமிக்கடியில் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.  691 கோடி ரூபாய்  செலவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், 790 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

6. வருவாய் துறை திட்டங்கள்

* வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* தேவைக்கேற்ப புதிய வட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

* மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டம் மற்றும் அம்மா சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.    

7. விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பு

* அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கப்படுவர்.

நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி விலை ஏதுமின்றி வழங்கப்படுகின்றது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு பண்டக சாலை மற்றும் அமுதம் சிறப்பு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிக் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

106 அம்மா மருந்தகங்கள் மூலம் 15 சதவீத அளவிற்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றிற்கு 190 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

மினரல் வாட்டர் எனப்படும் ''அம்மா குடிநீர்''  லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

முதற்கட்டமாக சென்னையில் ''அம்மா குடிநீர்'' திட்டத்தின் கீழ் மினரல் வாட்டர் எனப்படும் குடிநீர் விலையின்றி வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.

குறைந்த விலையில் அம்மா உப்பு விற்கப்படுகிறது.

இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதுடன், மேலும் செம்மைப்படுத்தப்படும்.    

8. பள்ளிக் கல்வி மேம்பாடு

* 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.

* பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
    
9. உயர்கல்வி மேம்பாடு

* புதிய கல்லூரிகள் தேவைக்கேற்ப துவங்கப்படுவதுடன், அனைத்து கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும்.

* பல்கலைக்கழகங்கள் மேக கணினியம் (Cloud Computing) மூலம் இணைக்கப்பட்டு, மாணாக்கர்கள் கல்வித் திறன் உயர வழிவகை செய்யப்படும்.

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து  கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் விடுமுறை காலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.   

10. அனைவருக்கும் உடல் நலம்

* புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் தேவைக்கேற்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.

* 24 மணி நேரமும் செயல்படும் 42 தாய் சேய் நல மையங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்; அம்மா மகப்பேறு சஞ்சீவி; சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு  முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில்  5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.

* முதியோர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரி மருவத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

* 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும்.

* நல்வாழ்வுக் குறியீடுகளில் மேலும் மேன்மையடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* சிறுவர், சிறுமியர்களுக்கு அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலமாக வைட்டமின் ‘ஊ’ மாத்திரை வழங்கப்படும்.

11. மின்சாரத்தில் தன்னிறைவு

* தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையங்கள் மூலம்  13,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்படும்.

* புனல் மின் திட்டங்கள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.

* 3,000 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படும்.

* சீரான மின்சாரம் விநியோகிக்கும் வகையில் மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.    

12. கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்

* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று  என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும்  78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

13. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

* வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி இட்லி குக்கர் வழங்கப்படும்.

* தேவைக்கேற்ப புதிய விடுதிகள் துவங்கப்படும்.

* விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கான மாத உணவுப்படி உயர்த்தப்படும்.

* சுயநிதி கல்லூரி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள், கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டாய கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

* சுய தொழில் முனைவோருக்கு தாட்கோ மூலம் 30 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படும்.

* மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு  தாட்கோ மூலம் பொருளாதாரக் கடன் உதவி வழங்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தொழிற்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க மாவட்டந்தோறும் தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.

* சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் தொழில் மனைகளில்  20 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்கென தனியே பயிற்சிகள் வழங்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு முயற்சி மூலதனத்திற்கான (Venture Capital) நிதி வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கென பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துகளை பரப்பிடும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் Dr. B.R. Ambedkar Foundation நிறுவப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.

* மதம் மாறிய ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.    

14. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்

* வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கு நீராவி இட்லி குக்கர் வழங்கப்படும்.

* தேவைக்கேற்ப புதிய விடுதிகள் துவங்கப்படும்.

* விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கான மாத உணவுப்படி உயர்த்தப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோர் சிறு தொழில்கள் மற்றும் வணிகம் ஆகியவை துவங்க குறைந்த வட்டியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்  உதவி வழங்கப்படும்.

 இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ