Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொது இடங்களில் இலவச வைஃபை: அதிமுக தேர்தல் அறிக்கை பகுதி-2

இதன் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

 

15. சிறுபான்மையினர் நலன்

* சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* தேவைக்கேற்ப சிறுபான்மையினருக்கான விடுதிகள் துவங்கப்படும்.

* சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதுடன், உபகரணங்களும் வழங்கப்படும்.

* மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் வசூல் செய்யும்  நன்கொடைத் தொகைக்கு தற்போது 1:2 என்ற விகிதாச்சாரத்தில் மானியம் உயர்த்தி வழங்கப்படுவது போல்  தொடர்ந்து வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கென வழங்கப்படும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  அறிக்கை பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்.

* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி தொடர்ந்து வழங்கப்படும்.

* வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* உலமா ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கென அரசின் மானிய உதவி வழங்கப்படும்.

* மசூதிகள் பழுது பார்க்கத் தேவையான நிதி உதவி வழங்கும் வகையில், வக்ஃபு வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும்.    

16. வன வளம்

* வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வன விலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் நிவாரண  உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

* வன வளத்தினை அதிகரித்து உயிர் பன்மையினைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

17. நெசவாளர் நலன்

* பொங்கல் திருநாளுக்கு 500 ரூபாய் மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக் கொள்ள  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் (Gift Coupon) வழங்கப்படும்.

* கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டு அனைத்தும் லாபத்தில் இயங்க வழி காணப்படும்.

* புதிய ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.

* பட்டு ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

* விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம்  750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* சிறிய மற்றும் நடுத்தர சாயத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்பட்டு  பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் 3 ஒருங்கிணைந்த பதனிடும் குழுமங்களுக்கு மத்திய அரசின் மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவைகளுக்கு 25 சதவீதம் மாநில அரசின் மானியம் வழங்கி இவை நிறுவப்படும்.  இதே போன்று நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பதனிடும் குழுமம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் இவை செயல்படுத்தப்படும்.

* நெசவாளர் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வருவாய் பெருக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

* விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பட்டு வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

18. மண்பாண்ட தொழிலாளர் நலன்

* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

* மண்பாண்டங்கள் செய்வதற்கான தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்.

* அரசு நிலங்களில் இருந்து தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்புச் சலுகை அளிக்கப்படும்.

* மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.   

19. உப்பளத் தொழிலாளர் நலன்

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.   

20. மாற்றுத் திறனாளிகள் நலன்

மாற்று திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தொழில் துவங்க பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துகிறது.  மாநில ஆதார வள மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன.  கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை போன்ற உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசின் வீட்டுத் திட்டங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  தேசிய வேலை உறுதித் திட்டத்தில் 50 சதவீதம் அல்லது  4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிறது.  கடந்த 5 ஆண்டுகளில் 3 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 5,633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 3,200 பேர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.  சிறப்பு முகாம்கள் மூலம் 1,340 மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.  மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.  வேலைவாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

21. வணிகர் நலன்

* தமிழ் நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு  ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

* வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் உள்ளாகாமல் வியாபாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

22. பத்திரப் பதிவு எளிமைப்படுத்துதல்

* சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு எளிமைப்படுத்தப்படும்.

* வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும்  முறை சீரமைக்கப்படும்.

23. சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல்

புதிய சாலைகளை அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், புறவழிச் சாலைகளை அமைத்தல், ரயில்வே மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும்  சிறு பாலங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் (Elevated Highway) அமைக்கப்படும்.

* கோயம்புத்தூர்-உப்பிலிப்பாளையம்-அவினாசி சாலை முதல் சின்னியம்பாளையம்-காளப்பட்டி, விமான நிலையம் வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.

* இது போன்ற உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.

* கடலூர் துறைமுகம், ஆழ்கடல் துறைமுகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   

24. குடியிருப்பு வசதிகள்

பெருநகரங்களில் குடிசைகளில் வாழும் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்களாக இவை மாற்றப்படும்.

* முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலம் 10 லட்சம் வீடுகள்  கட்டப்படும்.

* பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பழுதடைந்திருக்கும் தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்கப்படும்.

* பெருநகரங்களை ஒட்டி துணைக் கோள் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.

* அனைத்து வீட்டுமனை மற்றும் கட்டட வரைபட ஒப்புதல்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.

25. போக்குவரத்து மேம்பாடு

* போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

* சிற்றுந்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும்.

* மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி  விரிவுபடுத்தப்படும்.

* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய  இடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.   

26. தமிழ்மொழி மேம்பாடு

* தமிழ் மொழிக்கு தொண்டாற்றுபவர்களுக்கு, தமிழ் வளர்த்த சான்றோர் பெயர்களில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்படும்.

* பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.

* நாட்டு விடுதலைக்குப் போராடிய  தியாகிகள் மற்றும் பெரியோர்களுக்கு நினைவு மண்டபங்கள், சிலைகள் நிறுவப்படும்.

* தமிழை இந்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.

* தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பழமையான பாரம்பரிய சிற்ப கலை, கிராமியக் கலை ஆகியவைகள் பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

27. சுற்றுலாவில் முதலிடம்

* தமிழ் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து செல்லும் இடமாக தமிழகம் தொடர்ந்து நிலைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

28. திருக்கோயில்களில் ஆன்மீகப் பணிகள்

* திருக்கோயில்களில் ஆன்மீகப் பணிகள் செம்மையாக நடைபெற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

* கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் ஆகியவற்றின் திருப்பணிக்கு  25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி நிதி உதவி தற்போது வழங்கப்படுகிறது.  இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.   

29. விளையாட்டு மேம்பாடுத் திட்டம்

* தமிழ்நாட்டை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

30. தகவல் தொழில்நுட்ப சேவைகள்

* அனைத்து அரசுத் துறை சேவைகளும் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் மாவட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 57 அரசு சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  அனைத்து அரசு சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.  மேலும் தற்போது சில அரசு சேவைகள் கைபேசி வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இது அனைத்து அரசு சேவைகளுக்கும் செயல்படுத்தப்படும்.

* அரசு இ-சேவை மையங்கள் மூலம் அனைத்து அரசு சேவைகள் மற்றும் இதர சேவைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற ஏழ்மை குறைப்புக் குழுக்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலம்  10,034 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 57 அரசு சேவைகள் இம்மையங்களின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.25 கோடி பேர் இதனை பயன்படுத்தியுள்ளனர்.  அனைத்து அரசு சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.

* மேக கணினிய (Cloud Computing) செயல்பாடு மேம்படுத்தப்படும்.

* மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கான மேக கணினி சார்ந்த சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

* இல்லந்தோறும் இணையம் என்னும் சேவை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்படும்.

* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

* அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு ‘Set-top Box’ விலையின்றி வழங்கப்படும்.

* அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்  குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும்.

தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 70 லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்களுக்கு  மாதம்  70 ரூபாய் என்ற குறைந்த விலையில் கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள்  போன்ற பொது இடங்களில், Wi-Fi என்னும் கம்பியில்லா இணைய தள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணைய தள வசதி செய்து தரப்படும்.

31. விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம்

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி  (Cellphone) விலையின்றி வழங்கப்படும்.   

32. சமூக நலத் திட்டங்கள்

தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

* மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் A வைட்டமின் D மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட (Fortified) ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும். இதனால் ஆவினுக்கு ஏற்படும் இழப்பு அரசால் வழங்கப்படும்.

* திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம்  4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும்  எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.

* புதிய உணவு வகைகள் வழங்கும் சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்.

* முதியோர் உதவித் தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

33. ஊரக வளர்ச்சி திட்டங்கள்

அனைத்து குக்கிராமங்களிலும் எல்லா வசதிகளும் அளிக்க வகை செய்யும்  ‘தாய்’ திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலைகள் அமைக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 'தனி நபர் இல்ல கழிப்பறை' இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை எய்தப்படும்.

* அனைத்து கிராமங்களும் முழு தூய்மை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

* மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.

* கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி  தொடர்ந்து  வழங்கப்படும்.

* இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அந்தந்த இடங்களுக்கேற்ப வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் ஊரக மகளிர் கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும்.

34. நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள்

* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு லட்சம் ஊரகக் குடியிருப்புகளில், 91,000 குடியிருப்புகளுக்கு  உலக சுகாதார அமைப்பின் அளவுகோலின்படி  தூய்மையான குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 9,000 குடியிருப்புகளில், பகுதி அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை நீங்கலாக உள்ள  11 மாநகராட்சிகளில், 5 மாநகராட்சிகளில் உலக சுகாதார அமைப்பின் அளவுகோலின்படி, நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு  110 லிட்டர் என்ற அளவிலும், 6 மாநகராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல்  வழங்கப்படுகிறது. அதே போல் 124 நகராட்சிகளில் 53 நகராட்சிகளில், 90 லிட்டருக்கு மேலும், 70 நகராட்சிகளில் 40 லிட்டருக்கு மேலும் வழங்கப்படுகிறது.  528 பேரூராட்சிகளில், 526 பேரூராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல் வழங்கப்படுகிறது. எஞ்சிய இடங்களுக்கும் வரையறுக்கப்பட்ட  அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள்  தொடர்ந்து நிறைவேற்றப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

* நகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

15 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயுக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. 4 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக இதர நகராட்சிகளிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

* ஏழை எளிய மக்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையிலான அம்மா குடிநீர்த் திட்டம் சென்னை மாநகரத்தில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

35. தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கப் பெற்று தொழில் நிறுவனங்கள் அமைந்திட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தூத்துக்குடி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை உற்பத்தி மண்டலங்கள் நிறுவுவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கனரக இயந்திர உற்பத்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கான கொள்கை அளவிலான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு உற்பத்தி மண்டலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் பகுதியில் சூரிய மின் உற்பத்தியுடன் கூடிய கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு நிதி அளிக்க  ஜெர்மன் வளர்ச்சி வங்கி இசைவு தெரிவித்துள்ளது. இதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானூர்தி உற்பத்தி நிறுவனங்களுக்கான கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை – பெங்களுர்  தொழில்  வளாக திட்டத்தில் பொன்னேரி தொழில் முனையம் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தி, தமிழக தொழில் துறையில் முதலீடுகள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

* கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நவீனப்படுத்தப்படும்.

* சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.  இதனால்  சர்க்கரை ஆலைகள் லாபம்  ஈட்டி கரும்பு உற்பத்தியாளர்கள்  பயன்பெறுவர்.

* சர்க்கரை தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்கவும், அதில் உரிய பங்கு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ