Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

சென்னை: பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10.72 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளங்களிலும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close