Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இது அராஜகம்!' காவல்துறையை எச்சரிக்கும் கருணாநிதி

 

டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, காவல்துறையினரின் அராஜகம் இனியாவது நிறுத்தப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் கடையை மூடக் கோரி இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையினரையும், காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, காவல்துறையினரின் அராஜகம் இனியாவது நிறுத்தப்பட வேண்டுமென்று எச்சரிக்கிறேன்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களை எதுவும் தெரியாதவர்கள், சுலபத்தில் ஏமாற்றி விடலாம் என்று எண்ணிக் கொண்டே தொடர்ந்து அவருடைய பாணியில் காரியங்களை ஆற்றி வருகிறார். கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றி எப்போதாவது ஜெயலலிதா வாய் திறந்திருக்கிறாரா? தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்கான ஆணையோ, சட்டமோ தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் உடனடியாகக் கொண்டுவரப்படும் என்று நான் அறிவித்த பிறகும் கூட, சட்டப் பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் மதுவிலக்கைப் படிப்படியாகக் கூடத் தமிழகத்தில் கொண்டு வர இயலாது என்றே அறிவித்தார்.

ஆனால் அதற்குப் பிறகு, தமிழகத்திலே மதுவிலக்குக் கொள்கைக்கும், அதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் செய்த அறிவிப்புக்கும் உருவான வரவேற்பையும் ஆதரவையும் எண்ணிப் பார்த்து, ஜெயலலிதா அ.தி.மு.க. மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் போவதாகச் சொல்கிறார். படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவர்களுடைய கொள்கை என்றால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜெயலலிதா செய்த அறிவிப்புகள் என்ன? மேற்கொண்ட முன் முயற்சிகள் என்ன?

மதுவிலக்குக்காகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைந்ததற்கு யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? சென்னையில் பல இடங்களில் மாணவர்கள் மதுவிலக்குக்காக போராட்டம் நடத்தினர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் அவர்கள் மீதும் தடியடி நடத்திக் கைது செய்தனர். மதுவிலக்குக்காக “டாஸ்மாக்" கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க.வின் காவல்துறை ஆடிய வன்முறை வெறியாட்டங்களுக்கெல்லாம் யார் காரணம்?

மதுவிலக்குக் கொள்கைக்காகத் தமிழகமே ஒருமித்துக் குரல் கொடுத்து வரும் இந்த நேரத்திலே கூட நேற்றையதினம் சென்னையில் மணலி மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர்கள் மீது காவல்துறையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை ஏடுகளில் புகைப்படங்கள் வாயிலாகவும், தொலைக் காட்சிகளிலும் பார்க்க முடிந்தது. போராட்டம் நடத்திய தாய்மார்களை காவல்துறையினர் தரதர வென்று இழுத்துச் செல்வதையும், பூட்ஸ் கால்களால் எட்டி உதைப்பதையும், ரத்தம் சொட்டச் சொட்ட பெண்கள் தாக்கப்படுவதையும் கண்ட யாரும் இந்த ஆட்சியினரைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள்; 10 பெண்களின் மண்டை உடைந்துள்ளது. இவ்வாறு மதுவிலக்குக் கொள்கைக்காக போராடுபவர்களைக் கடுமையாகத் தாக்கிய நிலையில் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவேன் என்று அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் மற்றும் ஒரு கபட நாடகம் என்பது திட்டவட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ