Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலுக்காக புதுச்சேரியில் 144 தடை! - ஆணையம் அதிரடி

 



புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மாநில தேர்தல் அதிகாரி அதிரடியாக பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் புதுச்சேரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமி, அனைத்துக் கட்சியினரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியை தவிர மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படம்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ