Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அப்துல் கலாம் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள்!' - பொன்ராஜ்

சென்னை: அப்துல் கலாம் பெயரை பயன்படுத்த தடை என்பது அரசியல் காரணங்களுக்காக என்று பொன்ராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். இவர், 'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கினார்.  இதனையடுத்து சர்ச்சை ஏற்பட்டபோது, " அப்துல் கலாம் ஒரு பொது முகம். அவரது கனவுகளை நிறைவேற்றவே அவரது பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறோம். அதில் தவறு ஏதும் இல்லை" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், 'அப்துல் கலாம் விஷன் இந்தியா'  கட்சி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பொன்ராஜ், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற, வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும். எங்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து மாற்று அரசியல் கூட்டணி என்ற பெயரில் 46 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த தடையை ஏற்படுத்தி உள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். உயர் நீதிமன்றம் விதித்த தடையை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close