Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராபிக் ராமசாமியின் எதிரி ஜெ. அல்ல... ஆனால், ஜெ.தான். - எப்படி?

 

எனக்கு எதிரி ஜெயலலிதா அல்ல, அதிமுகதான் என்று மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் நான் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் புவனேஸ்வரி, காட்டுமன்னார்கோவிலில் ரவிச்சந்திரன், கும்பகோணத்தில் பாத்திமா, பாபநாசத்தில் வேம்பு என மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

மற்ற தொகுதிகளில் வாக்காளர்கள்,  நேர்மையான நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்படி நல்ல வேட்பாளர்களே இல்லை என நினைத்தால் நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும்.

எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல, அதிமுகதான் எதிரி. இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம் மலிந்துள்ள அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்பதுதான் என் லட்சியம். கரூர் அன்புநாதன் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close