Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுக, அதிமுகவின் சாதனை இதுதானாம்! - சொல்கிறார் சீமான்

காஞ்சிபுரம்: 50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளின் சாதனை என்பது சலுகை, மானியம், போனஸ், இலவசம்  என்பதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.உஷா(எ)நிறைமதியை ஆதரித்து வாக்குச் சேகரித்து பிரசாரம் செய்த சீமான் இவ்வாறு கூறினார்.மேலும் அவர் பேசுகையில்,'மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக,திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா? இலவசங்கள் வழங்கியதை சாதனை என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா,கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்.இது சாதனையா வேதனையா? அதை யார் சொல்லுவது.

நாட்டில்,கல்வி,மருத்துவம்,போக்குவரத்து,மின்சாரம் என்று அனைத்தும் தனியார் மயம்.அப்படி என்றால் எதுக்குத்தான் அரசு இருக்கிறது? என்றால் கமிஷன் வாங்கிக்கொண்டு 'கம்'னு இருப்பதற்குத்தான் அரசு.இங்கு முதல்வர்கள், பிரதமர்கள் அல்ல மக்கள் தேர்வு செய்வது. கமிஷன் பாய்ஸ்- ஐ தான் தேர்வு செய்கிறோம். அப்படி அனைத்துத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள் அவர்கள்.எல்லாமே தனியார் வசம் என்றால் சாராய ஆலைகளையும், சாராய கடைகளையும் அரசு நடத்தும் என்றால் அந்த அரசு நமக்குத் தேவையா?' என்றார்.

                      

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close