Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கலா? திமுகவினர் திரண்டதால் சென்னையில் பரபரப்பு!

சென்னை: சென்னை முகப்பேரில் அதிமுக பிரமுகர் சுதாகர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து,  அந்தப் பகுதியில் திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,  முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுதாகர். இவருடைய வீட்டில், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அலெக்சாண்டரை வெற்றி பெறச் செய்ய, பணம் பதுக்கி வைத்திருப்பதாக  தகவல் பரவியது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த  திமுகவினர், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு  தகவல் அளித்தனர்.

உடனே விரைந்து வந்த தேர்தல் அதிகாரி திவாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு சோதனை நடத்த அனுமதி இல்லை என்று கூறி, சுதாகரின் வீட்டை சோதனையிடாமல் வருமான வரித்துறையினர் வருகைக்காகக் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புகார் அளித்துப் பல மணி நேரம் ஆகியும் வருமான வரித் துறையினர் வராததால், திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாகச்  செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, சுதாகர் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் நேற்று(வெள்ளி) இரவு அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close