Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னாச்சு... தாறுமாறாக உயர்ந்த டாஸ்மாக் விற்பனை! - விசாரணை ஆன் தி வே

சென்னை: தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விமசிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி," பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால்,  அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், 19ம் தேதிக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப்படும்.வரும் 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,"டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37% அதிகரித்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமானவரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார்" எனவும் தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ