Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுலுக்கு கொலை மிரட்டல்: பிரசார இடம் மாற்றம்!

சென்னை: தேர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி மற்றும் தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, அவரது பிரசார இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மதுரையில், தி.மு.க., காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், நாளை (10-ம் தேதி) புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும், நாகர்கோவிலிலும் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு வந்துள்ளது. அதில், ''காரைக்காலில் பிரசாரம் செய்யும் போது, உங்களையும், உங்கள் தலைவரின் மகன் ராகுல் காந்தியையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் (கொலை செய்வோம்)'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் கையெழுத்து எதுவும் போடவில்லை. புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், மோதிலால் வோரா, ஆனந்த் சர்மா, ராஜீவ் சுக்லா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ராகுலுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் வந்திருப்பதால், அவரது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, நாகர்கோவில் நாளை ராகுல் காந்தி பிரசாரம் செய்வதற்காக நாகர்கோவிலின் மையப் பகுதியில் 5 நாட்களுக்கு முன்பே மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திடீரென ராகுல் காந்தி பிரசாரம் செய்யும் இடம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள கண்காடியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்பு நாட்டின் உயரிய பாதுகாப்பான எஸ்.பி.ஜி. பாதுகாப்பு பிரதமர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதிலிருந்து, சோனியா, ராகுல் உள்பட ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கும் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close