Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருத்துக் கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை உண்டாக்கும்! -யார் சொல்கிறார்?

சென்னை: கருத்து கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்து உள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி இணையதளம் மூலம் வாக்காளர்களுடன் உரையாடினார். அந்த உரையாடலின்போது, ''இந்தியாவில் தற்போது 1,700 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் சுமார் 150 கட்சிகள்தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கான அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.

அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் விஷயத்தில் தேர்தல் கமிஷன் கவனமுடன் நடந்து கொண்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் உடனுக்குடன் புதிய அதிகாரிகள் நியமனம் செய்ததில் இருந்து, தமிழ்நாட்டு அதிகாரிகள் பற்றி தேர்தல் கமிஷன் விரிவாக ஆய்வு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்தி வரும் சோதனைகளால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படாது. கரூர், எழும்பூரில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள் காட்டப்பட்ட பிறகு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்களின் வாக்களிக்கும் எண்ணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் மனதில் கருத்து கணிப்பு முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகையால் கருத்து கணிப்புகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். வாக்களித்து விட்டு வந்ததும் எடுக்கும் கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பதால் அதுவும் நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close