Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடலூரில் போட்டி ஏன்? சீமான் விளக்கம்!

கடலூர்: தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளைக் காட்டிலும்,  ஏன் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் எம்.பி.அகரம், அழகிய நத்தம் பகுதியில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்த சீமான்,  வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், "தமிழகத்தின் எல்லா பகுதிகளைக் காட்டிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது கடலூர் பகுதி. எப்போதுமே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதே எனக்கு சிறுவயது முதல் மனதில் நிற்கும் எண்ணம். அதனாலேயே கடலூரில் நான் போட்டியிடுகிறேன். நான் வெல்லுவது என்பது நாம் எல்லோரும் சேர்ந்து வெல்வதைப் போன்றதுதான்.

5 வருடத்திற்கு முன்பு உங்களில் ஒருவனாக நின்று கொண்டிருந்தேன். இப்போது இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அது உங்களுக்காகத்தான். 100 நாள் வேலைத் திட்டம் மூலம் கிடைக்கும் ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது? அதனால்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும்  என்று எண்ணுகிறோம். இலவச வேட்டிக்கும் சேலைக்கும்,அரிசிக்கும் பருப்புக்கும்,அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி நிற்கும் நிலை மாறவேண்டும்." என்றார்.       

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ