Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க ஜெயக்குமார் மீது ஆபாச புகார்... நிஜமா?

Character Assasination என்பார்கள். ஒருவர் மீது இருக்கும் மதிப்பு, மரியாதையை சீர்குலைக்க அவர் மீது எந்த எல்லைக்கும் சென்று அவதூறு பரப்புவது. அப்படி இந்த தேர்தலில், சில கட்சிப் பிரமுகர்களின் அந்தரங்கத்தை காட்சிக்கு வைத்து சிலர் அவதூறு கிளப்புகிறார்கள். சில வாரங்களுக்கு முன் அ.தி.மு.க. அமைச்சர் ரமணா, நேற்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன்... இன்று அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் என்று ஆபாச அவதூறு தாக்குதல் தொடர்கிறது.

ஒரு பெண்ணுடன் ஜெயக்குமார் தனிமைத் தருணத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும், 'ஜெயக்குமார் என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார்’ என்ற தொனியில் நீளும் கடிதமும் சமூக வலைதளங்களில் கடந்த இரு நாட்களாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், தெளிவில்லாத அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே, அது போலியாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.

புகைப்படம் குறித்து ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டால், ‘இதைப் பத்தி எத்தனை தடவைதான் பேசுறது... போதும் விட்ருங்க!’ என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அவருடைய தரப்பில் சில நண்பர்களிடம் பேசினோம். ''அந்தக் கடிதமும் போலி... அந்தப் படமும் மார்பிங் அல்லது போட்டோ ஷாப் வேலையாக இருக்க வேண்டும். அந்தப் படம் சுமார் மூன்று ஆண்டுகளாக  இப்படி அடிக்கடி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. 'அது போலியான படம். அந்தக் கடிதமும் முற்றிலும் பொய்’ என்று ஜெயக்குமார் பலமுறை விளக்கம் கொடுத்து சோர்ந்து போய் விட்டார். பின்னர் இது குறித்து விளக்கம் கொடுப்பதையே விட்டு விட்டார். தேர்தல் நெருக்கத்தில் இப்படித் திட்டமிட்டு அவதூறு பரப்புகிற ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!'' என்கின்றனர்.

ஜெயக்குமார் மீது புகார் கூறும் அந்தக் கடிதத்தில் ஒரு அலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு தொடர்பு கொண்டால்,  ''கோன்... கோன்..( யார்... யார்...?).'' என்று கேட்டு விட்டு பின்னர் 'ராங் நம்பர்' என்று சொல்லி இணைப்பை  துண்டிக்கிறார்கள்.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ