Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக 41... அதிமுக 38... காங். 8... தேமுதிக 18: குற்ற பின்னணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் கூறுகையில், " தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 283 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இதில், 157 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளது.

மேலும், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 170 வேட்பாளர்களில் 41 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 8 பேர் மீதும் குற்ற வழக்கு உள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வில் 38 பேர் மீதும், தே.மு.தி.க.வில் 18 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது.

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகளும், திருவொற்றியூர் தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.சாமி மீது ஒரு குற்றவியல் வழக்கும், விளவங்கோடு பா.ம.க வேட்பாளர் அரிகரன் மீது ஒரு குற்ற வழக்கும் உள்ளது.

இதேபோல், இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 553 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ