Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்த 1 கோடியே 64 லட்சத்தில் விஜயகாந்தும் ஒருவர்..!

சென்னை; இந்தியாவிலேயே முதன்முறையாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கண்ணியமான முறையில் வாக்களிக்க 1 கோடியே 64 லட்சம் பேர் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலில் நேர்மையாகவும், நடுநிலையோடும் வாக்களிக்கவும் 100 சதவீதம் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு செயல்பாடாக வாக்காளர்கள் அனைவரும் கண்ணியமான முறையில் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த வேண்டுகோளையேற்று பணமோ அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் வாக்களிப்போம் என்று  பொதுமக்கள் நேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ அமைப்புகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், வியாபாரிகள் சங்கங்கள், மருத்துவர்கள், கல்லுாரி, தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 1 கோடியே 64 லட்சம் பேர் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நடவடிக்கையால் இந்தியாவிலேயே முதன்முறையாக உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தமிழ்நாடு, லிம்கா சாதனை, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவிருப்பதாக தேர்தல் ஆணைத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,07,517 இடங்களில் 1,64,32,213 கோடி வாக்காளர்கள் கண்ணியமாக வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான்  போட்டியிடும்  உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான  பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது,அவர் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வைரலாகியுள்ளது.

இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டதாக 38,98,021 வாக்காளர்கள் வலைதளத்தில் பதிவு செய்துள்ளதோடு, 5,118 புகைப்படங்களையும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ