Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஸ்டர் தன்னம்பிக்கை ஐ.ஏ.எஸ்.! நம்பிக்கையூட்டும் மாற்றுத் திறனாளியின் கதை

'என்னைப் போன்றவர்கள் இனிமேல் இதுபோன்ற உயர் பதவிக்கு வரலாம் என்ற முன்மாதிரியாக, முன்னோடியாக உள்ளேன்' என்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற சென்னையை சேர்ந்த பார்வையற்ற பட்டதாரி வாலிபர்  பாலநாகேந்திரன் கூறினார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பார்வையற்ற பட்டதாரி வாலிபர் பாலநாகேந்திரன் என்ற வாலிபரும் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவதாஸ் முன்னாள் ராணுவவீரர். தாய் சுந்தரி.

வெற்றி குறித்து பாலநாகேந்திரா கூறுகையில், " நான் சென்னை ஓட்டேரியை சேர்ந்தவன். லயோலா கல்லூரியில் பி.காம். படித்தேன். எப்படியாவது ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறமுடியும் என்ற நிலையை மனிதநேய மையம் மாற்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி கொடுத்து வருகிறது. அந்த பயிற்சி மையத்தில் 2010-ம் ஆண்டு முதல் படித்து வருகிறேன்.

எனக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் இனிமேல் இதுபோன்ற உயர் பதவிக்கு வரலாம் என்ற முன்மாதிரியாக, முன்னோடியாக உள்ளேன். என்னைப்போன்ற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு என்னால் முயன்ற உதவியை செய்வேன். 2 முறை முதல்நிலை தேர்வையும், 2 முறை மெயின் தேர்வையும் எழுதியுள்ளேன். ஒரு முறைதான் நேர்முகத்தேர்வை சந்தித்தேன். முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close