Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் பதுக்கல் களேபரம்... அதிமுக பிரமுகர் தந்தை அதிர்ச்சியில் மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில்,  அதிமுக நகரச் செயலாளர் சிவக்குமார் வீட்டில் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இரண்டு கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி,  திமுகவினர் அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமாரின் தந்தை மயங்கி விழுந்து இறந்ததால்,வாழப்பாடியில் பதற்றம் நிலவுகிறது.    

வாழப்பாடி அதிமுக நகரச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் சிவக்குமார். இவரது வீட்டில் 2 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதை வாழப்பாடி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதாகவும் நேற்றிரவு திமுகவினர்,  தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை.எனவே அதிருப்தி அடைந்த திமுகவினர்,  சிவக்குமார் வீட்டின் முன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அதிமுகவினரும் அங்கு திரண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், சிவக்குமாரின் தந்தை நாகராஜ் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவக்குமாரின் தந்தை உயிரிழந்தார்.

இதையடுத்து நாகராஜின் இறப்புக்கு திமுகவினரே காரணம் என்று கூறி, அவர்கள்மீது  கொலை வழக்குப்  பதிவு செய்ய வேண்டுமென  வாழப்பாடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, திமுக வினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் வாழப்பாடி பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ