Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்புமணிக்கு நோ... ஜெயலலிதாவை நேருக்கு நேர் சவாலுக்கு அழைக்கும் ஸ்டாலின்!

 

திருவண்ணாமலை: பலமுறை விவாதத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தாலும், அதற்கெல்லாம் பதில் சொல்லாத ஸ்டாலின், ஜெயலலிதாவை நேருக்கு நேர் விவாதம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''கடந்த 2011 தேர்தலின்போது ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சியின்போது 110-வது விதியின் கீழ் 600-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், எந்த தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து திருவண்ணாமலையிலோ அல்லது வேறு பொது மேடையிலோ ஜெயலலிதா என்னோடு விவாதிக்க தயாராக உள்ளாரா? நான் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.

"பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது. இது தொடர்பாக என்னோடு நேருக்கு நேராக விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?" என நேற்று (10-ம் தேதி) பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்யியிருந்தார்.

அதேபோல், "ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பா.ம.க.தான் வழக்கு நடத்தியது. இது குறித்து என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?' என கடந்த ஆண்டு மே மாதம் அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபோன்று பல்வேறு நேரங்களில், பல்வேறு விஷயங்கள் குறித்து என்னோடு விவாதிக்க தயாரா? என மு.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால், இதற்கு மு.க.ஸ்டாலின் இதுவரை ஒரு பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க ஜெயலலிதாவுக்கு, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்கின்றனர் பாமகவினர்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ