Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடிசனுக்கும் கருணாநிதிக்கும் இப்படி முடிச்சு போடுகிறார் விஜயகாந்த்!

சென்னை: "லைட்டை கண்டுபிடிச்சது எடிசன், ஊழலை கண்டு பிடிச்சது கருணாநிதி" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணியின் மாநாடு திருச்சியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ''லைட்டை கண்டுபிடிச்சது எடிசன், ஊழலை கண்டுபிடிச்சது கருணாநிதி. தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பல்வேறு பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டார். ஆனால், சட்டமன்றத்தையே பாராட்டுக்கூடமாக்கியவர் ஜெயலலிதா.

தி.மு.க.வில் பொன்முடி, நேரு போன்ற முன்னாள் அமைச்சர்களும், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி போன்ற இப்போதைய அமைச்சர்களும் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஊழல் கூட்டணி. ஆனால், நாங்கள் மக்கள் நலக்கூட்டணி. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் அளிப்போம்'' என்றார்.

- சி.ய. ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ