Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வந்தால் செய்வோம் என்பவர்கள் ஏன் வந்தபோது செய்யவில்லை? கொந்தளிக்கிறார் சீமான்!

கடலூர்: ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று கூறும் அதிமுக திமுக  கட்சிகள் ஏன் ஆட்சிக்கு வந்தபோது மக்களுக்கு நன்மைகள் செய்யவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சீமான், திருப்பாதிரிபுலியூரில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "திமுக அதிமுகவினர் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்.ஆட்சிக்கு வந்தவுடன் மறந்துவிடுகிறார்கள். வந்தால் செய்வோம் என்பவர்கள் வந்தவுடன் ஏன் செய்யவில்லை? என்றால் அவர்களுக்குத் தொலைநோக்கில்லை.இதைப் புரிந்துகொண்டு தமிழர்கள் இந்தத் தேர்தலை ஒரு மாறுதலாகப் பாருங்கள். 50 ஆண்டுகளாக திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழகத்தை ஆண்டுவிட்டனர்.இத்தனை ஆண்டுகளாக செய்யாத நல்லதையா அடுத்துவரும் ஆண்டில் செய்துவிடப்  போகிறார்கள்? அதனால் அவர்கள் வந்தபோது செய்யவில்லை என்றுதான் கூறவேண்டும். தமிழர்கள் வறுமையில் இருக்கவேண்டும். அப்போதுதான் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்வான். வறுமை இருக்கும் இடத்தில் மறதி இருக்கும். அதைத்தான் திமுக அதிமுக முதலீடாகப் பார்க்கின்றன. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
                   

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close