Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் விழிப்பு உணர்வு பிரசாரம்; மதுரையை கலக்கும் மாணவர்களின் நடனம்

 

மதுரை;  நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கல்லூரி மாணவிகளின் கலக்கல் நடனத்துடன் கூடிய தேர்தல் விழிப்பு உணர்வு பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகளை தடுத்து, அனைவரையும் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இளைஞர்களை கவரும் வகையில் மீடியாக்களும், சமூக ஊடகங்களிலும் விளம்பரம் செய்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக மதுரையில் கல்லூரி மாணவ மாணவிகள், சினிமா பாடல் மெட்டில் அமைந்த தேர்தல் விழிப்பு உணர்வு பாடல்களுக்கு கலர்ஃபுல் உடையணிந்து பொதுமக்கள் மத்தியில் நடனம் ஆடினர். இது மதுரை மக்களை பெரிதும் கவர்ந்தது. 

மதுரையில் நேற்று கோரிப்பாளையம் அருகே நடந்த மாணவர்களின் நடன நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். இந்த நடன நிகழ்ச்சி மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது.

- செ.சல்மான்
படங்கள்; ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்