Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிஷ்கிந்தாவில் விபத்துக்குள்ளான இராட்டினம்..! கடைசி நிமிட வீடியோ காட்சி

சென்னை தாம்பரத்தில் உள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் இராட்டினம் விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் பலியானார். தற்போது, விபத்துக்குள்ளான இராட்டினத்தின் கடைசி நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் புதிதாக ‘டிஸ்கோ’ என்ற புதிய வகை இராட்டினம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை பூங்கா நேரம் முடிந்தவுடன் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் சென்று விட்டனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களை வைத்து ‘டிஸ்கோ’ வகை ராட்டினம் சோதனை செய்யப்பட்டது. அப்போது திடீரென அந்த ராட்டினம் மூன்றாக உடைந்து விழுந்தது.



இதில் ராட்டினத்தில் இருந்த ஊழியர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதில், சோமங்கலம் அடுத்த பழைய நல்லூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மணி என்ற 22 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பொழுது போக்கு பூங்காவின் உரிமையாளர் ஜோஸ் குன்னூஸ் மற்றும் மேலாளர் சக்திவேலன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் இராட்டினம் விபத்திற்குள்ளான கடைசி நிமிடக் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்